×

மாணவி சோபியா மிரட்டிய புகாரில் தமிழிசை மீது வழக்குப்பதிவு செய்ய தூத்துக்குடி குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு

தூத்துக்குடி : மாணவி சோபியா மிரட்டிய புகாரில் பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மீது வழக்குப்பதிவு செய்ய தூத்துக்குடி குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த மாதம் 3-ம் தேதி தமிழக பா.ஜ.  தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் சென்னையிலிருந்து விமானத்தில் நேற்று பிற்பகல் 12 மணிக்கு தூத்துக்குடிக்கு வந்தார். விமானத்தில் தமிழிசை இருக்கைக்கு அருகில் தூத்துக்குடி கந்தன் காலனியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற  அரசு டாக்டர் சாமியின் மகள் லூயிஸ் சோபியா (22) அமர்ந்து பயணித்துள்ளார். கனடாவில் பி.எச்டி படிக்கும் மாணவி லூயிஸ் சோபியா அங்கிருந்து சென்னை வந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் வந்துள்ளார்.

விமான பயணத்தின் போது தமிழிசையை பார்த்ததும் ஆவேசமடைந்த லூயிஸ் சோபியா பா.ஜ.வுக்கு எதிராக கோஷமிட்டார். தூத்துக்குடி விமான நிலையம் வந்த பின்னரும் கோஷமிட்டார்.அப்போது தமிழிசை சவுந்தர்ராஜனுக்கும்,  லூயிஸ்சோபியாவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து தமிழிசை சவுந்தர்ராஜன் விமான நிலைய அதிகாரிகளிடமும், தனியார் விமான நிறுவனத்திடமும் புகார் தெரிவித்துவிட்டு நெல்லைக்கு புறப்பட்டு  சென்றார். இதைத்தொடர்ந்து விமான நிலைய அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் லூயிஸ் சோபியாவிடம் புதுக்கோட்டை அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி அவர் மீது 3 பிரிவுகளில் (290, மெட்ராஸ் சிட்டி போலீஸ்  சட்டம்) வழக்குப்பதிவு செய்து கைது செய்து தூத்துக்குடி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

தூத்துக்குடி 3வது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி தமிழ்ச்செல்வி, லூயிஸ் சோபியாவை 15 நாள் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து நாட்டின்மீது அக்கறை இருப்பது அவசியம்தான். பொது இடங்களில்  இனி இது போன்று பேசக்கூடாது என மாணவி சோபியாவுக்கு தூத்துக்குடி நீதிமன்றம் அறிவுரை கூறி  நிபந்தனையற்ற ஜாமின் வழங்கியது. இந்நிலையில் மாணவி சோபியாவில் தந்தை கிருஷ்ணசாமி தொடர்ந்த வழக்கை  விசாரித்த தூத்துக்குடி நீதிமன்றம், பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை அறிக்கையை நவம்பர் 20ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Tuticorin Criminal Court ,Tamils , Student Sophia, Tamilnadu, Case, Thoothukudi Criminal Court
× RELATED மகளிர் நோய்களும் சித்த மருத்துவமும்!